• Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
Namadhu TV
No Result
View All Result
Home தமிழ்நாடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் மகளிர் தினம் கோலாகலம்..!

Namadhu TV by Namadhu TV
March 9, 2023
in தமிழ்நாடு
0
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் மகளிர் தினம் கோலாகலம்..!
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தில் ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டு மகளிர் தின விழா ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட இந்த மகளிர் தினவிழா ஸ்டெர்லைட் முதன்மை இயக்க அலுவலர் திருமதி. சுமதி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சமுதாய வளர்ச்சி பிரிவு தலைவர் சுந்தர்ராஜ் வரவேற்புரையாற்றினார். மனித வள மேம்பாட்டு பிரிவு உதவி தலைவர் சக்திவேல், தகவல் தொடர்பு பிரிவு தலைவர் திருமதி. மீரா ஹரிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தெற்கு வீரபாண்டியபுரம் பஞ்சாயத்து தலைவர் மாரியம்மாள் சுப்பையா, சாமி நத்தம் பஞ்சாயத்து தலைவர் முத்து மகாலட்சுமி நல்லதம்பி, மருத்துவர் பூங்கோதை, செயின்ட் அன்ட்ஸ் கல்லூரி பேராசிரியை சகோதரி.செல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமையவிருக்கும் பர்னிச்சர் பார்க்கில் பெண் தொழில் முனைவோருக்கு பணி ஒதுக்கீடுகளும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்., முறை சாரா தொழிலில் உள்ள பெண்களுக்காக தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும்., பஞ்சாயத்து செயலர் பதிவுகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், அரசு சார்ந்த ஒப்பந்த பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும்., பெண்களின் முன்னேற்றத்தில் தங்களுடைய பங்கினை முன்னிறுத்தி செயல்படுத்தி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் போன்ற தீர்மானங்களை பெண்கள் ஒருமித்த குரலில் எடுத்து கொண்டனர்.


ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்படுத்தி வரும் மகளிர் மேம்பாட்டு திட்டத்தை சிறப்பாக சமூகத்தில் செயல்படுத்தி வரும் துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலட்சுமி, பெல் சோசியல் வெல்பர் ட்ரஸ்ட் பியூலா ,தாயகம் வெல்பர் டிரஸ்ட் ஜெயக்கனி , டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் டிரஸ்ட் தாமோதரன், ஏபுள் பவுண்டேஷன் சுபர்லா, சென்ட் ஆன்ஸ் கல்லூரி விரிவுரையாளர் அருட்சகோதரி செல்வி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ஸ்டெர்லைட் முதன்மை இயக்க அலுவலர் திருமதி. சுமதி தலைமை உரை ஆற்றும் போது.. இந்த ஆண்டு ஐநா சபை உலக மகளிருக்காக அனைவருக்குமான டிஜிட்டல் கருத்தாக வெளியிட்டுள்ளது தொழில் நுட்பங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவர் தொழில்நுட்ப மேம்பாடுகளை பயன்படுத்தி பெண்களை மேலும் முன்னேற்றம் அடைவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஆணுக்கு பெண் சமமாக மதிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல பெண்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது கருத்துரு என்று கூறினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவர் பூங்கொடி பேசுகையில் விஞ்ஞான முன்னேற்றங்களை பெண்கள் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். பெண்களுக்கு பொன்னகையை விட புன்னகையை விட புன்னகை முக்கியம். பெண்கள் நல்லதே பேசி பழக வேண்டும். பெண்கள் உடல் நலனை காத்துக் கொள்ள வேண்டும் ஆண்டுதோறும் உடல் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறினார் .
விழாவில் மீனவப்பகுதி மற்றும் கிராம பகுதி பெண்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags: womens day

Related Posts

அஜித் தந்தை மறைவு.. வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்!
சினிமா

அஜித் தந்தை மறைவு.. வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்!

March 24, 2023
முதுமலை பாகன் தம்பதி பற்றிய ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது-  முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து !
இந்தியா

முதுமலை பாகன் தம்பதி பற்றிய ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து !

March 13, 2023
ஆஸ்கர் விருது வென்ற RRR படக்குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
சினிமா

ஆஸ்கர் விருது வென்ற RRR படக்குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

March 13, 2023
Next Post
அண்ணாமலை வாய் கொழுப்புடன் பேசுகிறார்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ..!

அண்ணாமலை வாய் கொழுப்புடன் பேசுகிறார்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ..!

கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை – கணவர், குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு..!

கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை - கணவர், குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு..!

பிரபல நடிகர், இயக்குநர் சதீஷ் கவுசிக் மரணம்..!

பிரபல நடிகர், இயக்குநர் சதீஷ் கவுசிக் மரணம்..!

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விபத்து
  • விளையாட்டு

Popular News

  • குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேர் திருவிழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…!

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேர் திருவிழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…!

    0 shares
    Share 0 Tweet 0
  • வியாழன் கோளின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா..!

    0 shares
    Share 0 Tweet 0
  • யானை உயிரிழந்த விவகாரத்தில் விவசாயி கைது; மூவர் அதிரடி பணியிடை நீக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்பீம் திரைப்படம்.. கண் கலங்கிய சீனர்கள்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • பா ரஞ்சித் இயக்கத்தில் கமல்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

    0 shares
    Share 0 Tweet 0
Namadhu TV

Namadhu TV is leading tamil online news channel

Recent News

  • அஜித் தந்தை மறைவு.. வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்! March 24, 2023
  • முதுமலை பாகன் தம்பதி பற்றிய ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து ! March 13, 2023
  • ஆஸ்கர் விருது வென்ற RRR படக்குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..! March 13, 2023

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விபத்து
  • விளையாட்டு

© 2022 Namadhu TV

  • Contact
  • Privacy Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்