தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தன்னா நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, குஷ்பூ, சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் இந்த படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார் . நடிகர் விஜய் இந்த படத்தில் சற்று மாறுபட்டு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . வாரிசு படப்பிடிப்பு தளத்திலிருந்து அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி படக்குழுவுக்கு பெரும் தலைவலியை கொடுத்தது
அதனைத் தொடர்ந்து பட குழுவினர் பட பிடிப்பு தளத்திலிருந்து எந்த ஒரு புகைப்படமும் மற்றும் வீடியோக்கலும் வெளியாகாமல் இருக்க எச்சரிக்கையாக கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது இப்படத்தின் இயக்குனரான வம்சி அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அதன் பிறகு மருத்துவர் ஒரு வாரம் ஓய்வு பெற்ற பின் பணிகளை தொடங்கலாம் கூறிவிட்டாராம் இதனால் வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஒரு வாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.