தமிழ்நாட்டின் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதி பற்றிய ஆவணப்படமான The Elephant Whisperers தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் ஆஸ்கர் விருது பெற்றுள்ளது. இந்த ஆவணப் படத்தை இயக்கி ஆஸ்கர் விருது பெற்ற கார்திகி குன்செல்வெஸ், தயாரிப்பாளர் குனெட் மொன்கோ ஆகியோருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரை உலகின் மிக உயரிய ஆஸ்கர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இந்தியாவின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது பெற்றுள்ளது. இதனை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதே ஆஸ்கர் விருதில் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் The Elephant Whisperers என்ற ஆவணப் படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. தமிழ்நாட்டின் முதுமலை யானைகள் தொடர்பானது இந்த ஆவணப் படம். வனத்தில் தாயை பிரிந்து தத்தளிக்கும் குட்டி யானைகள், முதுமலையில் பராமரிக்கப்படுகின்றன. 2017-ம் ஆண்டு ரகு, 2019-ல் பொம்மி ஆகிய இரு குட்டி யானைகள் முதுமலைக்கு கொண்டு வரப்பட்டன. முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதி பொம்மன், பெள்ளி. இவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுதா The Elephant Whisperers ஆவணப் படம்.
2019-ம் ஆண்டு The Elephant Whisperers ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. கார்திகி குன்செல்வெஸ், தயாரிப்பாளர் குனெட் மொன்கோ ஆகியோர் இந்த ஆவணப்படத்தை உருவாக்கி இருந்தனர். இப்போது இந்த ஆவணப் படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.
The Elephant Whisperers ஆவணப் படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்ற கார்திகி குன்செல்வெஸ், குனெட் மொன்கோ ஆகியோருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், முதன் முதலில் 2 பெண்கள் இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது பெற்று தந்துள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.