நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். குன்னூர் அருகே உள்ள ஜெகதாளவை தலைமை இடமாகக் கொண்டு காரக்கொரை , போதனெட்டி, பேரொட்டி, வள்ளிக்கரை , மஞ்சுதலா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி என 8 கிராமங்களை சேர்ந்த மக்கள் இத்திருவிழாவை கொண்டாடி மகிழ்வர்.
அந்த வகையில் படுகர் இன மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஹெத்தையம்மன் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது . இதன் காரணமாக நாளை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரீத் அறிவித்துள்ளார்.