• Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
Namadhu TV
No Result
View All Result
Home ஆன்மீகம்

பரணி தீபம், மகாதீபம் காண டிக்கெட்- நாளைமுதல் டிக்கெட் வெளியீடு.

Namadhu TV by Namadhu TV
December 3, 2022
in ஆன்மீகம்
0
பரணி தீபம், மகாதீபம் காண டிக்கெட்- நாளைமுதல் டிக்கெட் வெளியீடு.
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம், மகா தீபம் காண இணையதளம் மூலம் கட்டண அனுமதி சீட்டு நாளை முதல் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவில் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதனை காண்பதற்கு ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும், அன்று மாலை 6 மணிக்கு மகா தீப தரிசனம் செய்ய ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகள் மற்றும் ரூ.500 கட்டணத்தில் 1,000 அனுமதி சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த அனுமதி சீட்டுகள் https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற அருணாசலேஸ்வரர் கோவில் இணையதளம் வழியாக நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாளை காலை 10 மணி முதல் வெளியிடப்பட உள்ளது. கட்டணச்சீட்டு பெற ஆதார் அட்டை, செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக தேவை. ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும். கட்டணச்சீட்டு பதிவு செய்தவுடன் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் ஓ.டி.பி.எண் குறுஞ்செய்தி பதிவு செய்தவரின் செல்போன் எண்ணிற்கு வரும். கட்டணச்சீட்டு பதிவிற்கு பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக கட்டணச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு பரணி தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் 6-ந் தேதி அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு மகா தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மதியம் 2.30 முதல் 3.30 வரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த 2 தீப நிகழ்வுகளை காணவரும் பக்தர்கள் அசல் கட்டணச்சீட்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் கோவிலின் அம்மணி அம்மன் கோபுரம் (வடக்கு கோபுரம்) வழியாக அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகை தர தவறும் சேவார்த்திகளை கண்டிப்பாக அனுமதிக்க இயலாது. இணையதளம் வழியாக கட்டணச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து வருகை தர இருக்கும் சேவார்த்திகள் மேலே குறிப்பிடப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

பக்தர்கள் தீபத்திருவிழா பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள வசதியாக 1800 425 3657 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள க்யூஆர் கோடு பலகையினை பயன்படுத்தி பக்தர்கள் நன்கொடைகளை இணையதளம் மூலம் செலுத்தலாம். மகா தீபத்திற்கு பிரார்த்தனை நெய் குடத்திற்கான காணிக்கை கட்டண சீட்டுகள் ராஜகோபுரம் (கிழக்கு கோபுரம்) அருகில் உள்ள திட்டிவாயில் பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் திருமஞ்சன கோபுரம் (தெற்கு கோபுரம்) நுழைவு வாயில் ஆகிய இடங்களில் விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: chennaiCOLLECTOR ORDERDEEPAMfeaturedindiapolicetamil naduThiruvannamalaiஆன்மீகம்இந்தியாகல்விசென்னை உயர்நீதிமன்றம்தமிழகம்தமிழ்நாடுதிருச்சிதொழில்நுட்பம்மதுரைமு க ஸ்டாலின்

Related Posts

அருள்நகர் புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுப் பெருவிழா..!
ஆன்மீகம்

அருள்நகர் புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுப் பெருவிழா..!

January 21, 2023
தஞ்சை பெரிய நந்திக்கு ஆயிரம் கிலோ காய், கனிகளை கொண்டு சிறப்பு அலங்காரம்!
ஆன்மீகம்

தஞ்சை பெரிய நந்திக்கு ஆயிரம் கிலோ காய், கனிகளை கொண்டு சிறப்பு அலங்காரம்!

January 16, 2023
நெற்றியில் விபூதி இன்றி வெளியான வள்ளலார் படம் – அறநிலையத்துறைக்கு ஆன்மீக பக்தர்கள் எதிர்ப்பு!
ஆன்மீகம்

நெற்றியில் விபூதி இன்றி வெளியான வள்ளலார் படம் – அறநிலையத்துறைக்கு ஆன்மீக பக்தர்கள் எதிர்ப்பு!

January 7, 2023
Next Post
மல்லிகைப் பூவின் விலை கிடு கிடு- கிலோ 5000திற்கு விற்பனை.

மல்லிகைப் பூவின் விலை கிடு கிடு- கிலோ 5000திற்கு விற்பனை.

கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்த்து- TTV.

கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்த்து- TTV.

அடுத்தாண்டு மகளிற்கான உரிமைத்தொகை ரூ1000 வழங்கப்பட்டும்- சபாநாயகர் அப்பாவு.

அடுத்தாண்டு மகளிற்கான உரிமைத்தொகை ரூ1000 வழங்கப்பட்டும்- சபாநாயகர் அப்பாவு.

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விபத்து
  • விளையாட்டு

Popular News

  • குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேர் திருவிழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…!

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேர் திருவிழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…!

    0 shares
    Share 0 Tweet 0
  • வியாழன் கோளின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா..!

    0 shares
    Share 0 Tweet 0
  • யானை உயிரிழந்த விவகாரத்தில் விவசாயி கைது; மூவர் அதிரடி பணியிடை நீக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்பீம் திரைப்படம்.. கண் கலங்கிய சீனர்கள்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • பா ரஞ்சித் இயக்கத்தில் கமல்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

    0 shares
    Share 0 Tweet 0
Namadhu TV

Namadhu TV is leading tamil online news channel

Recent News

  • அஜித் தந்தை மறைவு.. வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்! March 24, 2023
  • முதுமலை பாகன் தம்பதி பற்றிய ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து ! March 13, 2023
  • ஆஸ்கர் விருது வென்ற RRR படக்குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..! March 13, 2023

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விபத்து
  • விளையாட்டு

© 2022 Namadhu TV

  • Contact
  • Privacy Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்