அமெரிக்கா:-
அமெரிக்கா ஒரேகான் மாகாணத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் வேகமாக நுழைவதுள்ளான்.
அந்த இளைஞர் துப்பாக்கியுடன் நுழைவதை கண்டு அப்பள்ளியின் கால்பந்தாட்ட பயிற்சியாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அப்போது அந்த இளைஞர் வகுப்பறை ஒன்றுக்குள் நுழைந்துள்ளார். உடனே அந்த நபரின் துப்பாக்கியை பறிக்க முயன்று தோல்வியடைகிறார் கால்பந்தாட்ட பயிற்சியாளர் .
அந்த சமயம் வகுப்பறைக்குள் இருந்து வந்த பெண் ஒருவர் துப்பாக்கியுடன் இருந்த இளைஞரை கட்டியணைத்து சமாதனப்படுத்துகிறார்.
அப்போது சாதூர்யமாக கால்பந்தாட்ட பயிற்சியாளர் இளைஞரிடம் இருந்து துப்பாக்கியை பறித்துள்ளார்.
இதனை அடுத்து இளைஞரிடம் நடத்திய விசாரணையில், அவர் அப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதும்
தனது காதலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டதாம்.இதையடுத்து துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் அப்பள்ளிக்குள் நுழைந்ததாகவும் மேலும் இந்த செயலுக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இளைஞர் துப்பாக்கியுடன் வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
Click Here To Watch Video :-
0 comments