சென்னை:-
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆக்க்ஷன்.
ஹிப்ஹாப் தமிழா இசையில் தமன்னா,யோகிபாபு,ராம்கி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
பொதுவாக காமெடி படங்களை மட்டுமே இயக்கி வரும் இயக்குனர் சுந்தர் .சி முதல் முறையாக முழுமையான ஆக்சன் படமாக இந்த ஆக்க்ஷன் படத்தை எடுத்துள்ளார்.
விஷால் படத்தில் ஆரம்பத்திலேயே தமன்னாவுடன் ஒரு இண்டர்நேஷனல் கிரிமினலை பிடிக்கின்றார். அதை தொடர்ந்து கதை பின்னோக்கி செல்ல, விஷால் மிலிட்டரியில் பெரிய பதவியில் இருக்கிறார்.
அவருடைய அப்பா பழ.கருப்பையா தமிழகத்தின் முதலமைச்சர். விஷாலின் அண்ணன் ராம்கி அடுத்து முதலமைச்சராக தயாராக, இவர்கள் மத்தியில் ஒரு கட்சியுடன் ஒரு கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.
அதற்காக அந்த கட்சி தலைவர் தமிழகத்தில் மாநாடு நடத்த, அப்போது ராம்கி நண்பர் மூலமாக ஸ்டேஜில் பாம் வைத்து அந்த கட்சி தலைவரை கொள்கின்றனர்.
இந்த பழி விஷால் குடும்பத்தின் மீது விழ, இதன் உண்மையை அரிய உலகம் சுற்றி வில்லனை பிடிப்பதே இந்த ஆக்ஷன் படத்தின் கதை.
ஒட்டுமொத்த படத்தையும் விஷால் ஒற்றை ஆளாக சுமந்து செல்கிறார். சண்டை காட்சிகளில் விஷால் மிரட்டியுள்ளார்.
அவரை ஒரு தலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் வரும் தமன்னாவும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.
படம் இஸ்தான்புல், அல்கோர்னியா, லண்டன் பாகிஸ்தான் என வெளிநாட்டு லொகேஷங்களின் மூலம் பிரம்மாண்டமாக காட்சிபடுத்தியுள்ளார் சுந்தர்.சி.
பாடல்கள் பெரிதாக நம்மை கவராத போதும் பின்னணி இசை மூலமாக நம்மை ரசிக்க வைக்கிறார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி.
படத்தின் சண்டைக்காட்சிகள், அதிலும் குறிப்பாக இடைவேளை காட்சி.படத்தின் ஒளிப்பதிவு பல லொக்கேஷனை அழகாக படம் பிடித்தது போன்றவை படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
படத்தின் குறை என்னவென்றால் அதிகமான லாஜிக் மீறல் காட்சிகள் இடம்பெற்றிருப்பது தான்.படம் ஆரம்பித்து கதைக்குள் செல்லும் வரை கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது.
இரண்டாம் பாதி திரைக்கதை எதை நோக்கி செல்கிறது என தெரியவில்லை,பரபரப்பாக நடக்கும் காட்சிகளில் டூயட் பாடல்கள் தேவையில்லாத ஒன்றாகவே கருதத்தோன்றுகிறது.
மொத்தத்தில் ஆக்ஷன் படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இந்த ஆக்க்ஷன் படம் கட்டாயம் ஏமாற்றாது.
0 comments