வேலூர் :
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை மண்டல பயிற்ச்சி மையத்தில் நேற்று 105 பெண்கள் உட்பட 1100 துணை உதவி ஆய்வாளர்களின் 9வது பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
இதில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கீரன் ரிஜிஜீ கலந்துகொண்டு வீரர்களின் வண்ணமிகு அணிவகுப்பை ஏற்றார். பயிற்சியில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு சான்றுகள், மற்றும் கேடயங்களை வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய அவர், நாட்டின் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பணி சிறந்து விளங்கி வருகிறது.
நாட்டில் உள்ள முக்கிய இடங்கள் மட்டுமில்லாமல் தனியாருக்கு சொந்தமான இடம்மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பணியாற்றுகின்றனர்.
விண்வெளி மையம், ஏவுதளம், அணு உலைகள், துறைமுகம், பன்னாட்டு விமான நிலையங்கள், ராக்கெட் ஏவுதளம், மெட்ரோ ரயில் நிலையங்கள், சுரங்கங்கள், நாடாளுமன்ற கட்டிடங்கள், பிரதான சின்னங்கள்,
அருங்காட்சியங்கள், முக்கிய பாதுகாப்பு மற்றும் தனியார் நிறுவனங்கள் பாதுகாப்பு பணியிலும் மேலும் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட உள்ளனர் .
நாட்டில் இவர்களின் பனி மகத்தானதாக அமைந்துள்ளது. மத்திய பாதுகாப்பு படை வீர்கள் தங்கள் பணிகளில் திறமையாகவும் நுன்னரிவுடனும் செயல்பட வேண்டும் எனவும்
ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் நகரிலுள்ள விமான நிலைய பாதுகாப்பு பணியில் விரைவில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் தற்போது 42 சதவிதம் முதல் 50 சதவீதம் வரை பணியாற்றி வருகின்றனர். இதனை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதிய அளவில் பாதுகாப்பு இல்லை இது வருந்தத்தக்க செயல். மேலும் அந்த மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 61 விமான நிலையங்கள் உட்பட 350 இடங்களில் 1 லட்சத்து 55 ஆயிரம் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
0 comments