மகாராஷ்டிரா:-
மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பங்கள் நடந்து முடிந்த நிலையில் சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளன.
இந்த மூன்று கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மும்பையில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் வைத்து மகாராஷ்டிரா மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
நேற்று மகராஷ்ட்ரா மாநில சட்டப் பேரவையின் இடைக்கால சபாநாயகராக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திலீப் வால்ஸே பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது மகராஷ்டிரா சட்டப்பேரவையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது .
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றது
பெரும்பான்மைக்கு 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில் உத்தவ் தாக்கரே அரசுக்கு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உட்பட 169 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.
0 comments