சென்னை :
இன்று (பிப்ரவரி 12) காலையில் சென்னை அருகே கடலுக்கு அடியில் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளி அளவில் பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “இன்று காலை இந்திய நேரப்படி 7.02 மணியளவில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில், சென்னைக்கு கிழக்கே வடகிழக்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடக்கு அந்தமான், சென்னை மற்றும் போர்ட் பிளேர் ஆகிய பகுதிகளில் உள்ள நிலநடுக்கப் பதிவு கருவிகளில் பதிவாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. முதல் தகவல் அடிப்படையில் இந்த விவரங்கள் மட்டுமே வந்துள்ளன.
கூடுதல் தகவல்கள் மேற்கொண்டு வரும். இந்த நில அதிர்வானது நிலப்பகுதியில் அல்லாமல், கடற்பகுதியில் ஏற்பட்டதால் எந்த பாதிப்பும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
0 comments