பாகிஸ்தான்:-
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது.இதனால் கோபமான பாகிஸ்தான் அரசு இந்தியாவுடனான ராஜாங்க மற்றும் வணிக ரீதியிலான அனைத்து உறவுகளையும் துண்டித்தது.
பாகிஸ்தானின் இந்த முடிவு அவர்களுக்கே மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.இந்திய விவசாயிகளும், வர்த்தகர்களும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய மறுத்து விட்டனர்.
மேலும், பருவம் தவறி பெய்த மழை போன்ற காரணங்களாலும் உள்நாட்டில் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய காரணங்களால் பாகிஸ்தானில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளியின் விலை 180 முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த ஈரான் நாட்டில் இருந்து தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை இறக்குமதி செய்ய உள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் தேசிய உணவு பாதுகாப்பு அமைச்சரவை செயலர் தெரிவித்துள்ளார்.
0 comments