புதுடெல்லி:-
இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்து தற்போது தாய் நாட்டுக்கு திரும்பி வருகிறது.
இதற்கு அடுத்ததாக இம்மாத இறுதியில் அதாவது பிப்ரவரி 24ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு ஒருநாள் மற்றும் டி20 தொடர் இந்தியாவில் வைத்து நடைபெற உள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையே 2 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் என இரண்டு தொடர்கள் நடைபெற உள்ளன.
ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலே வீழ்த்தியதால் இந்த தொடரை இந்திய அணி வெல்லவே அதிக வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த தொடரை விளம்பரப்படுத்தும் விதமாக குழந்தைகள் ஆஸ்திரேலிய அணியின் ஜெர்சியை அணிந்து வருவது போன்று அவர்களை இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சேவாக் கிரிக்கெட் பந்துகளை காண்பித்து அழைப்பது போன்றும் காட்சிகள் இடம்பெறுகின்றன.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்டை பேபி சிட்டர் என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கிண்டலடித்தார்.அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இப்படி ஒரு விளம்பரம் உருவாக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
AD Video Link:-
https://twitter.com/StarSportsIndia/st
atus/1094502571044204550?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ct
wterm%5E1094502571044204550&ref_url=https%3A
%2F%2Fdheivegam.com%2Fstar-sports-advertisement-with-sehwag%2F
0 comments