மும்பை :-
மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த அக்டோபர் 21ம் தேதி தேர்தலும் 24ம் தேதி வாக்குகளும் எண்ணப்பட்டன.
இதில் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனா கட்சிக்கு 56 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்களும்,தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 56 இடங்களும் கிடைத்தன.
அதிக இடங்களில் வெற்றிபெற்ற சிவசேனா,பாஜக இடையே முதல்வர் யார் என்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆட்சியமைக்க தேவையான காலங்கள் முடிவடைந்த பின்னும் இன்னும் அங்கு புதிய ஆட்சி அமையவில்லை.
புதிய ஆட்சி அமையாததால் மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்து வருகிறது.
இதற்காக அந்த மூன்று கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்து கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் இன்று நாடளுமன்ற வளாகத்தில் வைத்து பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் சந்திக்கிறார்.
மகாராஷ்டிரா மாநில விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாக சரத்பவார் பிரதமரிடம் பேசவுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும் மகாராஷ்டிராவில் தற்போது நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சரத்பவாரின் இந்த சந்திப்பு சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கவேண்டும் என்ற தேசியவாத காங்கிரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதோ என்ற கேள்வியை எழுப்புகிறது.
0 comments