திருப்பூர்:-
பிரதமர் நரேந்திர மோடி அரசு விழா மற்றும் பாஜகவின் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்க்காக இன்று திருப்பூருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் திருப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில் திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்டை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.இந்த மருத்துவமனை மூலம் சுமார் 1.22 லட்சம் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறுவர்.
மேலும் சென்னை தேனாம்பேட்டை - வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையையும் மோடி, வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணை முதல்வர் பன்னீர்செல்வம்,மத்திய இணையமைச்சர் போன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments