நெல்லை :
நெல்லை பாளையங்கோட்டை அருகே அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுவன் உயிரிழந்தான்.
பாளையங்கோட்டை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மகன் கமலேஷ் ( வயது 14 ) 9ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த நிலையில், நேற்று கமலேஷ் தனது நண்பர் சுதர்சன் உடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளான்.
பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி முன் பைக்கில் சென்ற போது, எதிரே வந்த அரசு பேருந்து உடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் பேருந்தின் அடியில் பைக்குடன் சேர்ந்து இருவரும் மாட்டிக்கொண்டனர். உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அப்பகுதி மக்கள்.
ஆனால் சிகிச்சை பலனின்றி கமலேஷ் உயிரிழந்தான். மற்றொரு மாணவன் சுதர்சனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments