இலங்கை:-
சமீபத்தில் நடந்த இலங்கை அதிபருக்கான தேர்தலில் இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பியும் பொதுஜன பெரமுனா கட்சியின் வேட்பாளருமான கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார்.
இதனைத் தொடர்ந்து இலங்கையின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரணில் விக்கிரமசிங்கே.
அதன்பிறகு தனது சகோதரரும்,முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார் கோத்தபய ராஜபக்சே.
இந்நிலையில் இலங்கை அதிபராக பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே, 6 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி மேல் மாகாணம், தென் மாகாணம், மத்திய மாகாணம், வடமேற்கு மாகாணம் உள்ளிட்ட 6 மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இதுவரை ஆளுநர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில் கோத்தபய ராஜபக்சேவின் ஆதரவாளரான முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை வடக்கு மாகாணத்திற்கான ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் போர் குற்றம் நடைபெற்றதாக ராஜபக்சே சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது, எந்த போர்க்குற்றமும் நடைபெற வில்லை என முத்தையா முரளிதரன் அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
0 comments