தூத்துக்குடி:-
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திருமண மண்டபம் ஒன்றில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் மூலமாக பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் படி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு 1043 பயனாளிகளுக்கு 3 கோடியே 29 லட்சத்து 37 ஆயிரத்து 650 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதையடுத்து, அமைச்சர் கடம்பூர் செ.ராஜு செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் கூறியதாவது:-
'திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடுவதற்கு முன் திருக்குறள் ஒளிபரப்பப்பட்டு வந்தது. அதேபோல் திரைப்படங்களின் தலைப்புக்கு முன்னதாக திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் வெளியிடுவதற்கு, தயாரிப்பாளர்கள் சங்க பிரதிநிதிகளிடம் அறிவுறுத்தப்படும்.
தமிழக முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் வெற்றிடம் இல்லாமல் கட்சியையும், ஆட்சியையும் மட்டுமல்ல தமிழகத்தையே வழி நடத்தி வருகின்றனர்.
வெற்றிடம் என்று நினைப்பவர்களுக்கு, அதை நினைக்க உரிமை உண்டு. யாருக்கு வெற்றிடம் எங்கு வெற்றிடம் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். தமிழகத்தைப் பொருத்தவரை வெற்றிடம் என்பதே இல்லை' என்றார்.
0 comments