சென்னை :
கல்விக் கொள்கை பற்றி நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும் என அமைச்சர் கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பி உள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்து தெரிவித்து இருந்தார். அதற்கு பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில், தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு சூர்யா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதில், கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும். நன்கு தெரிந்துகொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம். அரை வேக்காடு தனமாக பேசுபவர்களுக்கு எப்படி பதில் கூற முடியும் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
0 comments