சென்னை :
சென்னையில் வேலைக்குச் சேர்ந்த 2வது நாளிலேயே 8வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் தனிதா. இவர் சென்னை அம்பத்தூரில் உள்ள ஐயோபெக்ஸ் டெக்னாலஜி என்ற ஐடி நிறுவனத்தில் நேற்று முன்தினம் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
2வது நாளாக நேற்று பணிக்குச் சென்ற அவர், காலை 10 மணி முதல் மாலை வரை பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாலை 6.45 மணியளவில் அவர், அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இளம் பெண் ஐடி நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த 2வது நாளிலேயே தற்கொலை செய்து கொண்ட மர்மம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
0 comments