இந்தியாவில் முதன் முதலாக கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மற்ற மாநிலங்களுக்கும் இது பரவியதால், நாடு முழுவதும் 37 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்து இருக்கிறது.
இந்நிலையில் கரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்படுமா என்கிற கேள்விக்கு பிசிசிஐ தரப்பில் பதில் தெரிவித்துள்ளதாவது.
நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். எல்லா முன்னேற்பாடுகளிலும் கவனம் செலுத்துவோம். எந்தக் குறையும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். ஐபிஎல் தொடங்க இன்னமும் பல நாள்கள் உள்ளன. எனவே யாரும் பதற்றப்பட வேண்டாம். ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்படுவது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு மைதானத்திலும் மருத்துவக்குழு செயல்படும். எல்லாப் பார்வையாளர்களும் பரிசோதிக்கப்படுவார்கள் என்றார்.
0 comments