மும்பை:-
இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மிகச்சிறப்பாக நடைபெற்றது.இதில் இங்கிலாந்து அணி இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை பவுண்டரிகளின் அடிப்படையில் வென்று முதல் முறையாக உலகசாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிவரை முன்னேறிய இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்து உலககோப்பையிலிருந்து வெளியேறியது.
அடுத்ததாக இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20,3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.
இந்த தொடரில் கோலி,தோனி போன்ற வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படும் என்றும் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்படுவார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது பிசிசிஐ மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் விராட்கோலியே கேப்டனாக செயல்படுவார் என்று தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நட்சத்திர வீரர் ரோஹித் ஷர்மாவுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது.தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர வீரர் முரளி விஜய்க்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:-
விராட்கோலி(C),அஜின்கியா ரஹானே,மயங்க் அகர்வால்,கேஎல் ராகுல்,புஜாரா,ஹனுமன் விஹாரி,ரோஹித் ஷர்மா,ரிஷப் பண்ட்,விருத்திமான் சாஹா,ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா,குல்தீப் யாதவ்,இஷாந்த் ஷர்மா,முகமது ஷமி,ஜஸ்ப்ரீத் பும்ரா,உமேஷ் யாதவ்.
0 comments