கொல்கத்தா:-
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்காளதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிக்கொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
அதே போன்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பகல்-இரவாக டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவில் வைத்து வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.
இதையடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மூன்று டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
முதலில் நடக்கும் டி20 தொடர் டிசம்பர் 6ல் மும்பை வைத்து தொடங்குகிறது.ஒருநாள் போட்டி தொடர் டிசம்பர் 15ம் தேதி சென்னை வைத்து தொடங்குகிறது.
இந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:-
விராட் கோலி(C),ரோஹித் ஷர்மா(VC),ஷிகர் தவான்,கேஎல் ராகுல்,ஸ்ரேயாஸ் ஐயர்,மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட்,ஷிவம் துபே,கேதார் ஜாதவ்,ரவீந்திர ஜடேஜா,யூஸ்வேந்திர சாஹல்,குல்தீப் யாதவ்,தீபக் சாஹர்,முகமது ஷமி,புவனேஷ்குமார்.
டி20 தொடருக்கான இந்திய அணி:-
விராட் கோலி(C),ரோஹித் ஷர்மா(VC),ஷிகர் தவான்,கேஎல் ராகுல்,ஸ்ரேயாஸ் ஐயர்,மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட்,ஷிவம் துபே,வாஷிங்டன் சுந்தர்,ரவீந்திர ஜடேஜா,யூஸ்வேந்திர சாஹல்,குல்தீப் யாதவ்,தீபக் சாஹர், முகமது ஷமி,புவனேஷ்குமார்.
0 comments