டெல்லி:-
மத்திய டெல்லியின் கரோல் பாக் பகுதியில் அர்பிட் பேலஸ் ( Arpit Palace ) என்ற நட்சத்திர ஹோட்டலில் நேற்று பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது இதில் 17 பேர் உயிழந்தனர்.
இந்த ஹோட்டலில் கட்டிட விதிமுறை மீறப்பட்டுள்ளதா என்பதை விசாரிக்க மேஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர் சிங்.
மேலும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த தீவிபத்து தொடர்பாக மிக கோபமாக தனது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அதில் அவர் கூறியதாவது:-கட்டிட விதி மீறலில் மனித உயிர்களுடன் விளையாடும் அதிகாரிகளின் கல்நெஞ்சம் என்னை துயருறச் செய்கிறது.
இந்த ஹோட்டல் ஜிஜிஎஃப் அலுவலகத்துக்கு வெகு அருகில் உள்ளது. இங்கு எப்படி வணிக நலன்களுக்காக வாகன நிறுத்த விதிகள், கட்டிட விதிமுறைகள் எப்படி வசதியாக மீறப்படுகின்றன என்பது பற்றிய முழு முதல் விவரம் எனக்குத் தெரியும்.இதை நினைக்கும் பொது அருவருப்பாக உள்ளது'என்று மிக கோபமாக பதிவிட்டுள்ளார்.
மேலும் 5 லட்ச ரூபாய் நிவாரணம் குறித்து அவர் பதிவிட்ட மற்றோரு டிவிட்டில்'நிச்சயமாக இறந்து போன மனித உயிர்கள் 5 லட்சம் ரூபாய்களை விடப் பெரியதுதான்.
நம் அரசு எந்திரங்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றன என்பது இதிலிருந்து புரிகிறது. இழப்பீடு என்பது பெருகும் காயத்துக்கு வெறும் பேண்ட் எய்ட் போன்றதுதான்... ஆனால் நமக்குத் தேவை அறுவைசிகிச்சைகள். ஒட்டுமொத்தமாக அமைப்பையே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்'என்று கடுமையாக சாடியுள்ளார் கவுதம் கம்பீர்.
0 comments