சென்னை:-
தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து வரும் பிரபல சீரியல் நடிகர் ஈஸ்வர்.இவர் தன்னுடன் நடித்த சீரியல் நடிகை ஜெயஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இந்த தம்பதிக்கு ஒரு மகளும் உள்ளார்.
இந்நிலையில் ஈஸ்வருக்கு வேறொரு பிரபல நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும் அவரை திருமணம் செய்வதற்காக தன்னிடம் விவாகரத்து கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார் நடிகை ஜெயஸ்ரீ.
அதில் 'பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேவதையை கண்டேன் சீரியலில் நடித்துவரும் ஈஸ்வர் அதே சீரியலில் வில்லியாக நடிக்கும் மஹாலக்ஷ்மி என்ற நடிகையுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறாராம்.
மேலும் வீட்டில் மனைவி, குழந்தை முன்னிலையிலேயே அவருக்கு வீடியோ கால் செய்து கொஞ்சி குலாவுகிறாராம்.
அவரை திருமணம் செய்யவிரும்பும் ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீயிடம் விவாகரத்து கேட்டு கொடுமை செய்துள்ளார். அடித்து சித்ரவதை செய்துளளர்.
அவருக்கு குடிப்பழக்கம் இருப்பது மட்டுமின்றி கடன் வாங்கியாவது சூதாட்டத்தில் ஈடுபடுகிறாராம். அதனால் ஏற்பட்ட கடன்களை நான் தான் கட்டி வருகிறேன்.என்று கணவர் ஈஸ்வர் மீது பல்வேறு புகார்களை கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஜெயஸ்ரீ.இதையடுத்து நடிகர் ஈஸ்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் நடிகை மஹாலக்ஷ்மிக்கும் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments