சென்னை :-
மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18ந்தேதியும், சூலூர், அரவக்குறிச்சி, திருப்புரங்குன்றம் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற மே - 19 ந் தேதியும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அமைந்துள்ளது.சொல்லப்போனால் அதிமுக அரசுக்கு வாழ்வா, சாவா போன்ற ஒரு மினி சட்டமன்ற தேர்தல் இதுவாகும்.
இந்த நிலையில் இந்த தேர்தலை அமமுக எவ்வாறு எதிர்கொள்ள உள்ளது. அமமுகவை சுற்றி என்ன நடைபெறுகிறது என்பது குறித்து சில தகவல்கள் அரசியல் களத்தில் வெளியாகி உள்ளது. அதில்,
- தேர்தலை எதிர்கொள்வதால் அமமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சிறையில் இருக்கும் சசிகலா மூலமாக ஒரு வேண்டுகோள் செய்தியை வெளியிடலாமா என்பது குறித்து விவாதம் அமமுக வட்டாரத்தில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், தண்டனைக் குற்றவாளியாக சிறையில் சசிகலா உள்ளதால் இதைப்போன்று வேண்டுகோள்கள் வெளியிட சட்டத்தில் இடமில்லை என அமமுக வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் துணைப்பொதுச்செயலாளரான தினகரன் வழியாக சசிகலா விடுக்கும் வேண்டுகோள் பற்றிய செய்திகள் வெளிவந்தால் அது அமமுக தொண்டர்களுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என அமமுக வட்டாரத்தில் பேசப்படுகின்றன. ஆதலால் விரைவில் சசிகலாவின் வேண்டுகோள் செய்தி தினகரன் மூலமாக வெளிவர வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
- இடைத்தேர்தலில் 7 - 8 தொகுதிகளை கைப்பெற்றுவதே சிரமம் என உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. குறைந்தது 10 தொகுதிகளாவது வென்றாக வேண்டும் என்ற மனநிலையில் தான் முதல்வர் உள்ளதாகவும், அப்படி வென்றால் தான் ஆட்சியை தக்கவைத்து, சுலபமாக அடுத்த 2 வருடத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்பதால் தற்போது கொங்கு அமைச்சர் ஒருவர் மூலம் முக்கிய திட்டத்தை முதல்வர் கையில் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி வடமாவட்டங்களில் உள்ள அமமுக வேட்பாளர்களை தொடர்புக்கொண்டு அவர்களை சமாதானம் செய்து தங்கள் பக்கம் திருப்புவது தான் அந்த திட்டமாம் . இப்படி தங்களது கோரிக்கைகளை செவி சாய்க்கும் அமமுக வேட்பாளர்களுக்கு 50 சி வரை வழங்குவதற்கு பேரம் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் பேசப்படுகிறது.
- பெரியகுளம் தொகுதி அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது ஏற்பட்டுள்ள பாலியல் புகார் நீதிமன்றம் வரை சென்று இன்றைய தினம் தான், கதிர்காமுவை தேர்தல் முடியும் வரை கைது செய்யக்கூடாது. தேர்தல் முடிந்த பின்பு மனுதாரருக்கு நோட்டீசு அனுப்பி விசாரணைக்கு அழைக்கலாம். சம்மபந்தப்பட்ட போலீசாரின் விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை வழங்கி உள்ளது. கதிர்காமுவின் சர்ச்சைக்குரிய வீடியோ கிடைத்ததும். அதனை பொதுவெளியில் வெளியிட வைத்ததன் பின்னணியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளதாக சொல்லப்படுகிறது. பொதுமக்கள் மத்தியில் கதிர்காமுவுக்கு அவப்பெயரை உண்டுபண்ணுவது மட்டுமில்லாமல், நீதிமன்றத்திற்கு அலையவிட்டால் அவரது பிரச்சாரமும் பாதிக்கும். ஆகவே அதனை கணக்கிட்டே துணை முதல்வர் ஓ.பி.எஸ் இவ்வாறு செயல்பட்டுள்ளார் என சொல்லப்படுகிறது. ஆகவே இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் வருகிற 18ந் தேதிக்கு முன்பு அதிமுக அமைச்சர் ஒருவர் குறித்த வீடியோவை வெளியிட அமமுக தயாராகி வருவதாக தகவல்கள் சொல்லப்படுகிறது.
1 comments
gold fish casino slots http://onlinecasinouse.com/# - online casino slots free free casino games online http://onlinecasinouse.com/#