மும்பை :-
இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் அண்மையில் தனியார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார் அதில் அவர் கூறியதாவது :-
உலககோப்பை போட்டிகளுக்கு முதிர்ச்சியான வீரர்கள் அணிக்கு தேவை. கடந்த 2011ம் ஆண்டு உலககோப்பை இந்திய அணியில் இளம் வீரர்கள், மூத்த வீரர்கள் என சம அளவில் கலவையாக வீரர்கள் இருந்தனர், உதாரணமாக கோலி, ஸ்ரீசாந்த் போன்ற இளம் வீரர்களும், சச்சின், சேவாக் போன்ற மூத்த வீரர்களும் அணியில் இருந்தனர்.1983 உலகக்கோப்பை இந்தியா அணியிலும் இதுபோன்று கலவையாக தான் வீரர்கள் இடம்பிடித்து இருந்தனர்.
தற்போதுள்ள அணியில் தோனி சீனியர் வீரராக உள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக அவர் விளையாடிய விதம் என்பது, தன்னால் முன்பு போல் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது. இதைப்போன்ற ஆட்டங்களை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தினால் தங்களுக்கு அது மகிழ்ச்சி தான்.
தற்போது தோனி தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். உலக்கோப்பைக்கு முன்பு அவர் ஐபிஎல் போட்டியிலும் விளையாட உள்ளார். ஆகையால் 14 -16 போட்டிகள் அவர் கண்டிப்பாக விளையாடும் சூழ்நிலை ஏற்படும். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக அவர் தற்போது வைத்திருக்கும் ஃபார்ம்-யை தக்கவைக்கும் வகையில் ஐபிஎல் போட்டிகள் தோனிக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.
தனக்கு தனிப்பட்ட முறையில் தற்போது தோனியின் பேட்டிங்கை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என தெரிவித்தார்.
தற்போது நடக்கவுள்ள உலககோப்பை போட்டியில் இந்தியா அணியில் தோனி மிக முக்கிய வீரராக இருப்பார். விராத் கோலிக்கு தேவையான அறிவுரை வழங்கவும், சிறந்த விக்கெட் கீப்பராகவும், பீல்டிங் நிற்கும் இளம் வீரர்களுக்கு ஊக்கப்படுத்தும் இடத்திலும் இருப்பார்.
0 comments