ஜார்க்கண்ட்:-
இந்திய அணியின் சீனியர் வீரராகவும்,அதே சமயம் நட்சத்திர வீரராகவும் திகழ்பவர் தல 'தோனி'.ஒரு கேப்டனாக இந்திய அணிக்காக பல கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.
மேலும் ஐசிசியின் அனைத்து கோப்பைகளை வென்ற ஒரே சர்வதேச கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் தோனி.
இந்நிலையில், அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக தற்போது அவரது சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மைதானத்தில் உள்ள தெற்கு முனைக்கு தோனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பை ஜார்கண்ட் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.மேலும் அந்த தெற்கு முனை இனி
M.S.Dhoni Pavilion என்று அழைக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
0 comments