சென்னை:-
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் இந்தாண்டு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதிகளை அறிவித்துள்ளார்.
அதில் ' டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் 2 கட்டங்களாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவான வாக்குகள் ஜனவரி 2, 2020 அன்று எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
டிசம்பர் 6ல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.இந்த வேட்பு மனு தாக்கலூக்கான கடைசி நாள் டிசம்பர் 13.வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் டிசம்பர் 18 ஆகும்.
தேசிய தகவல் மையத்துடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்புமுதற்கட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர்.
மேலும் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்' என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments