சென்னை:-
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.இதில் மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர் பாலு எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே 'தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் அப்ளாடோக்சின் எம்1 என்ற நச்சு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருக்கிறது.
நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இதற்கு, அடுத்த இடங்களில் டெல்லி, கேரளா மாநிலங்கள் உள்ளன.
தமிழகத்தில் 551 பால் மாதிரிகள் பரிசோதனை செய்ததில் 88 பால் மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகம் இருந்தது, உணவு கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது'என்று கூறினார்.இது தமிழக மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுக்கும் விஷயமாக அமைந்துள்ளது.
0 comments