மும்பை:-
தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் தான். ஜியோவின் வருகைக்கு பின் அனைவருக்கும் இணையம் மிகவும் சாதரணமான விஷயமாக மாறி வருகிறது.
டெலிகாம் சந்தையைப் போல் பிராட்பேண்டு சந்தையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஜியோ நிறுவனம் ஜியோ ஜிகா ஃபைபர் என்று அழைக்கப்படும் பிராட்பேண்ட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் வி பைபர் திட்டத்தில் 1ஜிபிபிஎஸ் வேகத்துடன் 1000ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.
இதில், நன்றி ஏர்டெல் திட்டங்களும் கிடைக்கின்றது. மலிவு விலைபோல ஏர்டெல் ரூ.799க்கு திட்டத்தை தொடங்கவுள்ளது.
இதில் மாதத்திற்கு ரூ .799 முதல் தொடங்கும் திட்டங்கள், 1000 ஜிபி வரை இலவச டேட்டா பயன்பாடு, 1 ஜிபிபிஎஸ் எக்ஸ்ட்ரீம் திட்டம், ஏர்டெல் நன்றி நன்மைகளும் கிடைக்கிறது.
5 பிராட்பேண்ட் திட்டங்களையும் ஏர்டெல் வழங்குகின்றது. வேகம் 40Mbps மற்றும் 1Gbps வரை இருக்கும். இந்தியாவில் 1 ஜி.பி.பி.எஸ் இணையத் திட்டங்களை ஏர்டெல் வழங்குகிறது.
0 comments