பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் காலின் முன்ரோவுக்கும் இம்ரான் தாஹிருக்கும் இடையே மோதல் வெடித்தது.
பாகிஸ்தானில் டி20 சூப்பர் லீக் தொடர் நடந்துவருகிறது. இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது.
இம்ரான் தாஹிர் பொதுவாக விக்கெட் வீழ்த்திவிட்டால், இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு ஓட்டமாக ஓடி, விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியை கொண்டாடுவார். தாஹிரின் கொண்டாட்டம் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும், அதை பார்த்து பார்த்து சளித்துப்போன வீரர்களால் அதை சகித்துக்கொள்ள முடியவில்லை.
இஸ்லாமாபாத் அணி வீரரான காலின் முன்ரோவின் விக்கெட்டை 5வது ஓவரில் வீழ்த்திய இம்ரான் தாஹிர் வழக்கம்போல கையை விரித்துக்கொண்டு ஓடினார். அதைக்கண்டு கடுப்பான முன்ரோ, கோமாளி என அவரை விமர்சித்துள்ளார். ஆனால் முன்ரோ ஏதோ சொன்னதை உணர்ந்த தாஹிர், என்ன சொன்னார் என்று தெரியவில்லை.
தன்னை ஏதோ தகாத வார்த்தையில் திட்டியதாக நினைத்து அவரும் பதிலுக்கு முன்ரோவை திட்ட, மோதலானது.அதுகுறித்து பின்னர் விளக்கமளித்த முன்ரோ, தாஹிரை கோமாளி என்றுதான் சொன்னதாகவும் அது புரியாமல் அவர் தன்னை திட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments