சென்னையில் 20 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும், இதனை வலியுறுத்தி பாமக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.இந்த நிலையில், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட எல்லைகளில் சென்னை ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள சென்ற பாமகவினரை டிஐஜி சாமுண்டேஸ்வரி தலைமையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், ஆங்காங்கே சாலை மறியல் நடத்தினர். மேலும், வண்டலூர் ரயில் நிலையத்திற்குள் புகுந்த பாமகவினர், ஓடிக்கொண்டிருந்த விரைவு ரயில் மீது கற்களை எடுத்து வீசினர். இதனால் ரயில் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பதட்டம் ஏற்பட்ட காரணத்தினால் சாலை மறியல் மற்றும் ரயில்களில் கல் எறிதல் சம்பவத்தை நடத்திய பாமகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.தாம்பரத்தில் இருந்து சென்னைக்குள் வரும் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. புறநகர் ரயில்கள் மூலம் பாமகவினர் சென்னைக்குள் வருவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெருங்களத்தூரில் போலீசாரை கண்டித்து பாமகவினர் சாலை மறியல் -போக்குவரத்து பாதிப்பு .

0 comments