புரெவி புயல் காரணமாக பெய்துவரும் கனமழையால் உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் சன்னதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் கனமழை பெய்துவருகிறது.இந்த நிலையில் சிதம்பரத்தில் இருக்க கூடிய புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. சிதம்பரம் கோயிலில் மழைநீர் வெளியேற்றுவதற்கு பல்வேறு வடிகால்கள் இருந்ததாகவும், அரசர் காலத்தில் இதற்கான சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த காலகட்டத்தில் மழைநீர் வடியக்கூடிய வடிகால்கள் அனைத்தும் தூர்ந்து போய்யுள்ளதால் இந்த மழைநீர் வடிய முடியாமல் இருப்பதாக அங்கிருக்கும் சிலரால் தகவல் தெரிவிக்கப்பட்டது.சிதம்பரம் நடராஜர் கோயிலில் தில்லை கோடைக்கு செல்ல கூடிய வகையில் வடிகால் வசதி முன்னரே அங்கு இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது சரி செய்ய முடியாத காலகட்டத்தில் வடிகால்கள் தூர்ந்து போய்யுள்ளதால் மழைநீர் வெளியேற முடியாமல் அனைத்து சன்னதிகளும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் அங்குள்ள தீட்சிதர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
0 comments