இந்த நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், ஆச்சார்யா படத்திற்கான படப்பிடிப்பின் போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாத நிலையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த 5 தினங்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்,எனக் குறிப்பிட்டுள்ளார்.நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
0 comments