தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானுக்கு சில விஷமிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். நான் ஒரு சாதாரண ஆள். சிலரின் அவதூறு, அநாகரிகமான பேச்சுக்கள் என் இதயத்தை நொறுக்குகிறது என்று பதிவிட்டுள்ளர் பிரதீப் ஜான். நான் யாரிடமும் என் பதிவுகளை பின்பற்றுமாறு கேட்டதில்லை. என் பதிவுகள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், நீங்கள் புறக்கணித்துவிட்டு மேலே செல்லலாம்.மழை மனிதர் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் பிரதீப் ஜான். வானிலை அறிக்கையை வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இவரது தமிழ்நாடு வெதர்மேன் என்ற ஃபேஸ்புக் பக்கம், இணைய பக்கங்கங்களையும் ட்விட்டர் பக்கங்களையும் லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.இதை தொடர்ந்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானுக்கு ஆதரவாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். குறிப்பாக விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு வெதர்மேன்’ திரு ப்ரதீப் ஜானை மதரீதியில் அவதூறு செய்வதும், அவரைக் கொலைசெய்யவேண்டும் எனப் பதிவிட்டு வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் ஏற்புடையதல்ல. இதைத் தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments