சென்னை ஐஐடியில் கேன்டீன் தொழிலாளியிடம் இருந்து மாணவர்களுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தண்டையார்பேட்டையில் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.அப்போது தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: 'தமிழ்நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது. கல்வி நிலையங்களில் உள்ள விடுதிகளில் கொரோனா பரிசோதனை செய்ய முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். குடும்ப நிகழ்ச்சியில் மாஸ்க் எதற்கு என நினைப்போருக்கு ஐஐடி விவகாரம் ஒரு பாடம். முக கவசத்தை கட்டாயமாக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார் .பாதிக்கப்பட்ட ஐஐடி மாணவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.' என்றார்.இதைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்,'கொரோனா இறப்பு விகிதத்தை மேலும் 1% ஆக குறைக்க நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது சென்னை ஐஐடி.கொரோனா தொற்று குறைந்துவிட்டது என நினைப்போரை எச்சரிக்கும் விதமாக ஐஐடியில் கொரோனா தொற்று பரவியுள்ளது.சென்னையில் 3ல் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
0 comments