சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொன்னேரி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொன்னேரி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.ஹேம்நாத்தை பென்னேரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.அங்கு சித்ராவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தொடர்ந்து சித்ராவிடம் சண்டையிட்டு பேசி வந்தது. போலீசார் விசாரணையில் உறுதியானதை தொடர்ந்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பென்னேரியில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர்.முன்னதாக அடிக்கடி சித்ராவிடம் ஹேம்நாத் சண்டையிடுவது குறித்து ஹேம்நாத் தந்தை ரவிச்சந்திரனின் செல்போனில் தெரிவித்த ஆதாரம் காவல்துறையிடம் சிக்கியது.முன்னதாக ஈ.வி.பி படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற ஹேம்நாத், சித்ராவிடம் சென்று அங்கேயே சண்டையிட்டதும் இனி சின்னத்திரை, வெள்ளித்திரை போன்ற சினிமாவில் நடிக்க கூடாது என்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க கூடாது என சித்ராவிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.படப்பிடிப்பு தளத்தில் இருந்து இருவரும் ஒன்றாக காரில் சென்று தனியார் ஓட்டலில் தங்கியிருந்த அறையில் தற்கொலை நடந்த இரவு இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் நடைபெற்று உள்ளதாக காவல்துறையினரிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
0 comments