கொரோனா தொற்று பரவல் காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 9 மாதங்களாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று குறைந்ததும் தமிழக அரசால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால், குற்றாலத்தில் மட்டும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வந்தது.இன்று முதல் குற்றால அருவியில் அனைவரும் குளிக்கலாம் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, அருவிக் கரையில் உள்ள தீர்த்தவாரி விநாயகருக்கு அதிகாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், கிருமிநாசினியும் கொடுக்கப்பட்டது.இதனை அடுத்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து குளிக்கும் வகையில் போலீசார் சுற்றுலாப்பயணிகளை குளிக்க அனுமதித்தனர். இன்று குற்றால அருவி திறப்பதை அறிந்து பல மாவட்டங்களை சேர்ந்தோர் இரவோடு இரவாக கிளம்பி வந்து குற்றால அருவியில் குளித்தனர். அருவியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments