சென்னை அணியிலிருந்து ஆல்ரவுண்டர் பிராவோ காயம் காரணமாக விலகியுள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியபோது பந்து வீசிய பிராவோ காயம் அடைந்தார். அதனால்தான் போட்டியின் இடையில் ஓய்வெடுக்க சென்றுவிட்டார். அப்போட்டி முடியும் வரை அவர் திரும்ப வில்லை. அதனால்தான் இறுதி ஓவரை ஜடேஜா வீச டெல்லி எளிதாக வென்றது. ஒருவேளை பிராவோ கடைசி ஓவரை வீசியிருந்தால் சென்னை வென்றிருக்க வாய்ப்பிருந்தது அல்லது டெல்லிக்கு கடும் நெருக்கடியையாவது கொடுத்திருப்பார். இந்த நிலையில் காயத்தால் எஞ்சிய போட்டிகளில் பிராவோ விளையாட மாட்டார் என்று சென்னை அணி சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஐ. பி. எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல் !

0 comments