அமெரிக்க ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற முற்போக்கு குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரமிளா ஜெயபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த குழு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு, சமூக நீதி உள்ளிட்ட விவகாரங்களில் ஜனநாயக கட்சிக்கு வழிகாட்டுதல்களையும், அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறது.இந்த குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த்பிரமிளா ஜெயபால் சென்னையில் பிறந்தவர். அவர் கூறும்போது, இன பாகுபாடுகளை களைந்து சமூக நீதியை முன்னேற்றவும், வறுமை, சமத்துவமின்மையை அகற்றி நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச்செல்ல உதவுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய பொறுப்பு பாராளுமன்ற முற்போக்கு குழு தலைவராக பிரமிளா ஜெயபால் தேர்வு .

0 comments