அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நேற்று முன் தினம் இரவு தன் இரு நாய்களில் ஒன்றான மேஜருடன் விளையாடும்போது அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் டெலாவேரின் நெவார்க்கிலுள்ள எலும்பியல் நிபுணரைச் சந்தித்ததாக அவரது அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோ பைடனுக்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.அவரது வலது காலின் நடுவில் இரண்டு சிறிய எலும்புகளில் லேசான முறிவு ஏற்பட்டுள்ளதால் சில வாரங்களுக்கு அவருக்கு நடைப்பயிற்சி தேவைப்படும் என்றும் சிறப்புக் காலணி ஒன்றை அணிய வேண்டுமெனவும் டாக்டர் ஓ கானர் தெரிவித்தார்.
0 comments