• Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
Namadhu TV
No Result
View All Result
Home அரசியல்

மார்க்ஸ் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது அறியாமையின் உச்சம் – முத்தரசன்

KRISHNAA by KRISHNAA
February 22, 2023
in அரசியல், தமிழ்நாடு
0
மார்க்ஸ் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது அறியாமையின் உச்சம் – முத்தரசன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

“வர்க்க பேதமில்லாத, சாதி, மத வேற்றுமைகள் இல்லாத, நிகரற்ற மனிதநேய சமூகம் அமைக்க முடியும் என்ற அறிவியல் உண்மையை உலகத்திற்கு அறிவித்த மேதை காரல் மார்க்ஸ் குறித்து விஷமத்தனமாக பேசுவதை ஆளுநர் ரவி இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆயிரமாண்டுகளில் தோன்றிய அறிஞர்களில் தலைசிறந்த பேரறிவாளர் காரல் மார்க்ஸ் என அறிவுலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனை அறியாத தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “காரல் மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது”என பேசியிருப்பது அவரது அறியாமையின் உச்சத்தை காட்டுகிறது.

தமிழ்மொழி, மற்றும் சமூகம் குறித்தும், இந்திய ஒன்றியத்தில் இணைந்துள்ள மாநிலங்களில் நிலவி வரும் தனித்துவம் வாய்ந்த சமூக உறவுகள் குறித்தும் அடிப்படை புரிதல் இல்லாதவர் தமிழ்நாட்டின் ஆளுநராக வந்திருப்பது வரலாற்றுத் துயரமாகும். சமூகப் பொருளாதார வாழ்வில் முற்றி வரும் நெருக்கடியில் இருந்து வெளியேற வழி தேடி, உலகம் முழுவதும் காரல் மார்க்ஸ் மறுவாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார் என்பதை ஆளுநர் கருத்தில் கொள்ள வேண்டும்.

சாதி அடுக்குமுறை சமூக அமைப்பில், மனிதர்களைப் பிளவுபடுத்துவதற்காகவே, மதவெறியை மூட்டிவிடும் மூடத்தனத்தின் “முகவர்கள்”, சமூக பொருளாதார விடுதலைக்கு வழிகாட்டிய அறிவு ஆசான் காரல் மார்க்ஸ் மீது அவதூறு பொழிவது புதிதல்ல. அவர் “உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள், இழப்பதற்கு ஏதுமில்லை, அடிமை விலங்குகளைத் தவிர” என்ற உண்மையை உலகுக்கு அறிவித்த அடி நாள் தொட்டு, அதன் மீது பொழியப்பட்ட அவதூறுகளையும், அடிப்படையில்லாத குற்றச்சாட்டுக்களையும், அடக்குமுறைகளையும் முறியடித்து முன்னேறி வருவதை வரலாறு உறுதி செய்துள்ளது.

வர்க்க பேதமில்லாத, சாதி, மத வேற்றுமைகள் இல்லாத, நிகரற்ற மனிதநேய சமூகம் அமைக்க முடியும் என்ற அறிவியல் உண்மையை உலகத்திற்கு அறிவித்த மேதை காரல் மார்க்ஸ் குறித்து விஷமத்தனமாக பேசுவதை ஆளுநர் ரவி இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு எச்சரிக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags: featuredMutharasanமுத்தரசன்

Related Posts

அஜித் தந்தை மறைவு.. வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்!
சினிமா

அஜித் தந்தை மறைவு.. வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்!

March 24, 2023
முதுமலை பாகன் தம்பதி பற்றிய ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது-  முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து !
இந்தியா

முதுமலை பாகன் தம்பதி பற்றிய ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து !

March 13, 2023
ஆஸ்கர் விருது வென்ற RRR படக்குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
சினிமா

ஆஸ்கர் விருது வென்ற RRR படக்குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

March 13, 2023
Next Post
தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ளது – நாம் தமிழர் வேட்பாளர் குற்றச்சாட்டு..!

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ளது - நாம் தமிழர் வேட்பாளர் குற்றச்சாட்டு..!

காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையாவிட்டால்  ஜனநாயகமும் அரசியல் சாசனமும் போய்விடும் – கார்கே

காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையாவிட்டால் ஜனநாயகமும் அரசியல் சாசனமும் போய்விடும் - கார்கே

OTT யில் வெளியானது விஜய்யின் ‘வாரிசு’

OTT யில் வெளியானது விஜய்யின் ‘வாரிசு’

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விபத்து
  • விளையாட்டு

Popular News

  • குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேர் திருவிழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…!

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேர் திருவிழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…!

    0 shares
    Share 0 Tweet 0
  • வியாழன் கோளின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா..!

    0 shares
    Share 0 Tweet 0
  • யானை உயிரிழந்த விவகாரத்தில் விவசாயி கைது; மூவர் அதிரடி பணியிடை நீக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்பீம் திரைப்படம்.. கண் கலங்கிய சீனர்கள்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • பா ரஞ்சித் இயக்கத்தில் கமல்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

    0 shares
    Share 0 Tweet 0
Namadhu TV

Namadhu TV is leading tamil online news channel

Recent News

  • அஜித் தந்தை மறைவு.. வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்! March 24, 2023
  • முதுமலை பாகன் தம்பதி பற்றிய ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து ! March 13, 2023
  • ஆஸ்கர் விருது வென்ற RRR படக்குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..! March 13, 2023

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விபத்து
  • விளையாட்டு

© 2022 Namadhu TV

  • Contact
  • Privacy Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்