கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ஒமைக்ரான் பி எஃப் 7 வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனால் சீனாவில் பாதிப்புகளும் , உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன .
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாநில அரசுகளும் மற்றும் யூனியன் பிரதேசங்களும் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் . அனைத்து கொரோனா நோயாளிகளின் மாதிரிகளையும் மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் , தினமும் மரபணு பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று பகல் 12 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார். சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.