அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சரத்பவார், லாலு பிராசத், பவன் கல்யாண்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 37 தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையவும், கூட்டமைப்பின் பிரதிநிதிகளாகவும் தக்க நபர்களை நியமிக்கவும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். சமூக நீதிக் கருத்தியலை முன்னெடுத்துச் செல்ல சமூக நீதி கூட்டமைப்பு முயற்சி செய்யும் என்றும் முதலமைச்சர் . சமூகநீதிக் கூட்டமைப்புக்கான பிரதிநிதிகளாகத் தக்க நபர்களை நியமிக்குமாறு அக்கறையுடன் கோருகிறேன். ஒடுக்கப்பட்டோருக்கு உண்மையான பொருள்பொதிந்த சமூகநீதி சென்றடைய நாம் ஒன்றுபட்டு இருந்தால்தான் முடியும். சமூகநீதியில் பல பத்தாண்டுகளாக நாம் அடைந்த முன்னேற்றத்துக்குப் பிற்போக்குச் சக்திகள் சவால் விடும் இந்த இடர்மிகு காலத்தில், ஒடுக்கப்பட்டோர் நலனை உறுதிசெய்ய முற்போக்கு ஆற்றல்கள் கைகோக்க வேண்டியது மிக இன்றியமையாதது ஆகும். இம்முன்னெடுப்பில், எங்களுடன் நீங்களும் இணைய உங்களை வரவேற்க நான் எதிர்நோக்குகிறேன்” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
© 2022 Namadhu TV