உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.
இந்த நிலையில் சீன தலைநகர் பெய்ஜிங்கின் மிகப்பெரிய மாவட்டமான சாயோயாங்கில் உள்ள அதிகாரிகள், COVID-19 நோயாகளின் அதிகரிப்பு காரணமாக இந்த வார இறுதியில் குடியிருப்பாளர்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். கடந்த வியாழன் அன்று சாயோயாங்கில் 466 கொரோனா தொற்று பதிவாகியுள்ளன.சீனா கொரோனா கட்டுப்பாடுகள் இன்றி தளர்த்தி வருவதால் இந்த பாதிப்பு மீண்டும் தொடர்வதாக மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.