சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் செல்வம். (38) இவர், நேற்றிரவு ராஜாஜி நகர் பிரதான சாலையில் தனது ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிவிட்டு இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்றது. உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த மடிப்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில், வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தோதலில் திமுக சாா்பில் 188-ஆவது வாா்டில் போட்டியிட செல்வமும், அவா் மனைவி சபீனாவும் விருப்ப மனு அளித்திருப்பது தெரியவந்தது.மறுபுறம் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்றும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.