• Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
Namadhu TV
No Result
View All Result
Home ஆன்மீகம்

மனிதம் தாண்டி புனிதம் இல்லை – இஸ்லாமியர்களுக்காக ஒருங்கிணைந்த மக்கள்.

Namadhu TV by Namadhu TV
December 27, 2022
in ஆன்மீகம்
0
மனிதம் தாண்டி புனிதம் இல்லை – இஸ்லாமியர்களுக்காக ஒருங்கிணைந்த மக்கள்.
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

200 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் சிதிலமடைந்ததால் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து புதிதாக ஒரு பள்ளிவாசலைக் கட்டியுள்ளது பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ளது பனங்குடி கிராமம். இந்தக் கிராமத்தில் வசிக்கும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் ஜாதி, மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். மேலும், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தக் கிராமத்தில் மத அடிப்படையில் எந்தச் சண்டையும் ஏற்பட்டதில்லை எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இவர்களின் வழிபாட்டு தலங்களான கோயில், சர்ச், பள்ளிவாசல் என மூன்றும் அடுத்தடுத்து அமைந்துள்ளது.

பனங்குடியில் உள்ள பள்ளிவாசல் 200 ஆண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது. தற்போது அந்தப் பள்ளிவாசல் சிதிலமடைந்து காணப்படுவதால் அங்கு வசிக்கும் இஸ்லாமியர்கள் அதே இடத்தில் புதிதாகப் பள்ளிவாசல் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து புதிய பள்ளிவாசல் கட்ட ஜமாத் தலைவர் முன்னிலையில் பனங்குடி கிராமத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பிறகு, இந்தக் கிராமத்தில் பெருவாரியாக உள்ள இந்து மக்கள், கிறிஸ்துவ மக்கள் பங்களிப்புடன் ரூ. 70 லட்சம் செலவில் பிரமாண்டமான புதிய முகைதீன் ஆண்டவர் ஜும்மா பள்ளிவாசல் கட்டப்பட்டது.

இதையடுத்து, பள்ளிவாசல் திறப்பு விழாவில் கிராம மக்கள் தலைமையில் இந்துக் கோயிலில் வழிபாடு செய்ததோடு, சீர்வரிசைத் தட்டுக்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று, மதநல்லிணக்கம் போற்றும் வகையில் கிராம மக்கள் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். மேலும், ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி தங்கள் கிராமத் திருவிழா போல் பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிலையில், அவர்கள் அனைவருக்கும் கந்தரி என்னும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதில் ஜமாத்தார்களும் ஐயப்ப பக்தர்களும் பள்ளிவாசலில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் காட்சிகள், மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Tags: featuredஆன்மீகம்இந்தியாதமிழ்நாடு

Related Posts

அருள்நகர் புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுப் பெருவிழா..!
ஆன்மீகம்

அருள்நகர் புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுப் பெருவிழா..!

January 21, 2023
தஞ்சை பெரிய நந்திக்கு ஆயிரம் கிலோ காய், கனிகளை கொண்டு சிறப்பு அலங்காரம்!
ஆன்மீகம்

தஞ்சை பெரிய நந்திக்கு ஆயிரம் கிலோ காய், கனிகளை கொண்டு சிறப்பு அலங்காரம்!

January 16, 2023
நெற்றியில் விபூதி இன்றி வெளியான வள்ளலார் படம் – அறநிலையத்துறைக்கு ஆன்மீக பக்தர்கள் எதிர்ப்பு!
ஆன்மீகம்

நெற்றியில் விபூதி இன்றி வெளியான வள்ளலார் படம் – அறநிலையத்துறைக்கு ஆன்மீக பக்தர்கள் எதிர்ப்பு!

January 7, 2023
Next Post
விதிமீறும் டி.டி.எஃப் வாசன்; நடவடிக்கை எடுக்குமா காவல்துறை? – இணையவாசிகள் கேள்வி.

விதிமீறும் டி.டி.எஃப் வாசன்; நடவடிக்கை எடுக்குமா காவல்துறை? - இணையவாசிகள் கேள்வி.

அ.தி.மு.க அலுவலக சீல் விவகாரம்.. 48 பேருக்கு போலீசார் சம்மன்..!!

அதிமுகவை பாஜக கட்டுப்படுத்தவில்லை - எடப்பாடி பழனிசாமி

அரியலூர் அருகே நகைக்காக 2 பெண்களை கொலை செய்தவர் கைது..!

மதுரையில் பெட்ரோல் குண்டுவீச்சு – ஸ்ரீதர்,சோணைமுத்து என்ற இருவர் கைது!

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விபத்து
  • விளையாட்டு

Popular News

  • ராஜஸ்தானில் திடீர் நிலநடுக்கம்..!

    ராஜஸ்தானில் திடீர் நிலநடுக்கம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • நேட்டோ  அமைப்பில் இணைகிறது ஸ்வீடன்..! ரஷ்யா எச்சரிக்கை..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • கொடநாடு வழக்கு ஒத்திவைப்பு..!

    0 shares
    Share 0 Tweet 0
Namadhu TV

Namadhu TV is leading tamil online news channel

Recent News

  • அஜித் தந்தை மறைவு.. வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்! March 24, 2023
  • முதுமலை பாகன் தம்பதி பற்றிய ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து ! March 13, 2023
  • ஆஸ்கர் விருது வென்ற RRR படக்குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..! March 13, 2023

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விபத்து
  • விளையாட்டு

© 2022 Namadhu TV

  • Contact
  • Privacy Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்