பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. அதன் தொடக்கத்திலேயே, பொருளாதார உலகில் இருந்து நம்பத்தகுந்த குரல்கள், ஒரு நேர்மறையான செய்தியையும், நம்பிக்கையின் கதிர்களையும், உற்சாகத்தின் தொடக்கத்தையும் கொண்டு வந்துள்ளன. இன்று முக்கியமானது, நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தொடரில் முதன்முறையாக குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ஆற்றிய முதல் உரை, நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கும், குறிப்பாகப் பெண்களுக்கான மரியாதைக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். உலகம் முழுவதும் இந்தியா மீது பார்வை உள்ளது. நமது நிதி அமைச்சரும் ஒரு பெண்தான். அவர் நாளை மேலும் ஒரு பட்ஜெட்டை நாட்டின் முன் தாக்கல் செய்கிறார். இன்றைய உலகளாவிய சூழ்நிலையில், இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமே இந்தியாவின் பட்ஜெட்டைப் பார்க்கிறது:
பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும்; எதிர்க்கட்சியின் குரலை மதிக்கிறோம். நிலையற்ற உலகப் பொருளாதாரச் சூழலுக்கு மத்தியில், இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் சாமானிய குடிமக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்ப்ப்புகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கும். இதற்காக நிர்மலா சீதாராமன் அனைத்து முயற்சிகளையும் எடுப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் பட்ஜெட்டாக நடப்பு பட்ஜெட் இருக்கும் என்றார்.