• Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
Namadhu TV
No Result
View All Result
Home அரசியல்

தப்புமா மகாராஷ்டிர அரசு?- சிவசேனா அதிருப்தி அணியில் மேலும் 4 எம்எல்ஏக்கள்: உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடி

Deepika by Deepika
June 23, 2022
in அரசியல், இந்தியா
0
தப்புமா மகாராஷ்டிர அரசு?- சிவசேனா அதிருப்தி அணியில் மேலும் 4 எம்எல்ஏக்கள்: உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா எம்எல்ஏக்கள் 30 பேர் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் அந்த அணியில் இன்று மேலும் 4 எம்எல்ஏக்கள் இணைந்தனர். இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணியை அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. 2019-ல் இந்தக் கூட்டணி பதவியேற்றது. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாரும் உள்ளனர்.

குவஹாட்டி சென்ற சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள்

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் 6 இடங்களில் பாஜக 3 இடங்களில் வென்றது. பாஜகவுக்கு 2 இடங்கள் மட்டுமே வெல்ல வாய்ப்பிருந்த நிலையில் சுயேச்சைகள், பிறகட்சி எம்எல்ஏக்கள் என 23 எம்எல்ஏக்கள் வாக்களித்ததால் 3-வது எம்.பி. பதவியையும் பாஜக வென்றது. இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மகாராஷ்டிரா மேலவை தேர்தலிலும் ஆளும் கூட்டணியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது.

மேலவைக்கு நடந்த தேர்தலின் போது மாலை 5 மணி வரை சிவசேனா சட்டப்பேரவைக் குழு தலைவரான அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் இருந்தார்.

அதன்பிறகு அவரும், சிவசேனா எம்எல்ஏக்கள் சிலரும் திடீரென மாயமாயினர். அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேயுடன் அவர்கள் குஜராத் மாநிலம் சூரத்துக்கு இரவோடு, இரவாக சென்று அங்குள்ள ஓட்டலில் தங்கியது பின்னர் தெரியவந்தது.

ஏக்நாத் ஷிண்டேயுடன் இருக்கும் 30 சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் சூரத்திலிருந்த அசாம் மாநிலம் குவாஹாட்டிக்குச் சென்று அங்குள்ள சொகுசு ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சூரத்தில் ஏக்நாத் ஷிண்டேவுடன் தங்கியிருந்த சிவசேனா எம்எல்ஏ நிதின் தேஷ்முக் நேற்று காலை மும்பை திரும்பினார். தான் கடத்திச் செல்லப்பட்டதாகவும், தனக்கு வலுக்கட்டாயமாக ஊசி போட்டதாகவும், தான் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் காட்டி உள்ளது.

இந்தநிலையில் மேலும் 4 எம்எல்ஏக்கள் தீபக் கேசர்கர், சதா சர்வாங்கர், மங்கேஷ் குடால்கர் மற்றும் சஞ்சய் ரத்தோட் ஆகியோர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்துள்ளனர். இதனால் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் பலம் 35 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘சட்டப்பேரவை உறுப்பினர்கள் மிரட்டப்பட்டு சூரத்தில் இருந்து குவஹாட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வெளியேறியவர்கள் சிவசேனா அல்ல. மும்பை தெருக்களில் நாம் பார்த்ததுதான் உண்மையான சிவசேனா. எங்கள் கட்சி பலமாக உள்ளது. சில எம்.எல்.ஏ.க்கள் எங்களை விட்டு விலகுவதால் நாங்கள் பலவீனமாகவில்லை. சுமார் 17-18 பேர் பாரதிய ஜனதா கட்சியின் காவலில் உள்ளனர். நாங்கள் 20 எம்எல்ஏக்களுடன் தொடர்பில் இருக்கிறோம்” என்றார்.

Tags: 4 more MLAs in Shiv Sena dissidentsCrisis for Uttav ThackerayMaharashtra governmentShiv Sena

Related Posts

‘மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது’ – உதய்பூர் சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்
இந்தியா

‘மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது’ – உதய்பூர் சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்

June 28, 2022
நுபுர் சர்மாவின் ஆதரவாளர் படுகொலையால் ராஜஸ்தானில் பதற்றம்; ‘மிரட்டும்’ வீடியோ வைரல் – இரு இளைஞர்கள் கைது
இந்தியா

நுபுர் சர்மாவின் ஆதரவாளர் படுகொலையால் ராஜஸ்தானில் பதற்றம்; ‘மிரட்டும்’ வீடியோ வைரல் – இரு இளைஞர்கள் கைது

June 28, 2022
ஜூலை 1 முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – முழு விவரம்
இந்தியா

ஜூலை 1 முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – முழு விவரம்

June 28, 2022
Next Post
தமிழ்நாடு, புதுவையில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாடு, புதுவையில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

சரயு நதியில் மனைவிக்கு முத்தம் கொடுத்த கணவர் மீது தாக்குதல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

சரயு நதியில் மனைவிக்கு முத்தம் கொடுத்த கணவர் மீது தாக்குதல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஓ.பி.எஸ் மீது வாட்டர் பாட்டில் வீச்சு.. பஞ்சர் செய்யப்பட்ட கார்.. பன்னீர்செல்வத்தை பாடாய் படுத்திய பொதுக் குழு..!

ஓ.பி.எஸ் மீது வாட்டர் பாட்டில் வீச்சு.. பஞ்சர் செய்யப்பட்ட கார்.. பன்னீர்செல்வத்தை பாடாய் படுத்திய பொதுக் குழு..!

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விளையாட்டு

Popular News

  • அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக விரைவில் பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம்..! பஞ்சாப் முதல்வர்

    அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக விரைவில் பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம்..! பஞ்சாப் முதல்வர்

    0 shares
    Share 0 Tweet 0
  • தங்கம் விலை சற்று குறைவு.. இல்லத்தரசிகள் சற்று ஆறுதல்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • கேரள முன்னாள் நிதியமைச்சர் டி.சிவதாச மேனன் மரணம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  •  இப்படி கூட ரோடு போட முடியுமா..? பாத்தீங்கன்னா ஆடி போயிடுவீங்க அசந்து போய்டுவீங்க..!

    0 shares
    Share 0 Tweet 0
Namadhu TV

Namadhu TV is leading tamil online news channel

Recent News

  • ‘மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது’ – உதய்பூர் சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் June 28, 2022
  • “மக்கள் பிரச்சினைகளில் திமுக ஆட்சி என்றாலும் எதிர்த்து நிற்போம்” – கே.பாலகிருஷ்ணன் June 28, 2022
  • 2007 டி20 உலகக் கோப்பை இந்திய அணி கேப்டனாக தோனி ‘டிக்’ ஆனது எப்படி? – என்.சீனிவாசன் பகிர்ந்த நிஜக் கதை June 28, 2022

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விளையாட்டு

© 2022 Namadhu TV

  • Contact
  • Privacy Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்