பொதுவாக குளிர்காலம் வந்துவிட்டாலே நமது சருமத்திலும் பல பிரச்சனைகள் வந்துவிடும். அதனால் குளிர்காலம் வந்துவிட்டாலே சில ஸ்கின் கேர் ரொட்டினை செய்து நமது சருமத்தை பாதுகாத்துக்கொள்வது நமக்கும் நமது சருமத்திற்கும் மிகவும் நல்லது.
அந்தவகையில் இன்றைய பதிவில் குளிர்காலத்தில் நமது சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் போக்கி நமது சருமத்தை பாதுகாக்க உதவும் சில டிப்ஸ் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
பொதுவாக குளிர்காலம் வந்துவிட்டாலே நமது சருமத்தில் பனிப்பத்து மற்றும் தோல்களில் வறட்சி போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படும். மேலும் பல சரும பிரச்சனைகளும் ஏற்படும். அவ்வாறு ஏற்படும் அனைத்து சரும பிரச்சனைகளையும் போக்கி உங்களின் சருமத்தை பொலிவு பெற உதவுகின்ற சில டிப்ஸ்களை பற்றி பார்க்கலாம்.
முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
கடலைமாவு – 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன்
தயிர் – 2 டீஸ்பூன்
கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 2 டீஸ்பூன்
மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். பின்னர் அதனை உங்களின் முகத்தில் தடவி கொண்டு 1/2 மணிநேரம் வைத்து அதன் பிறகு குளியுங்கள்.
இதனை தொடர்ந்து செய்துவருவதின் மூலம் பனிக்காலத்தில் ஏற்பாடும் அனைத்து சரும பிரச்சனைகளும் நீங்கி உங்களின் சருமம் நன்கு பொலிவு பெரும்.
டிப்ஸ் – 2
இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
கஸ்தூரிமஞ்சள் – 2 டீஸ்பூன்
தயிர் – 2 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு சாறு – 2 டீஸ்பூன்
தக்காளி சாறு – 2 டீஸ்பூன்
கடலைமாவு – 2 டீஸ்பூன்
அரிசிமாவு – 2 டீஸ்பூன்
முல்தானி மெட்டி- 2 டீஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 2 டீஸ்பூன்
மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். பின்னர் அதனை உங்களின் முகத்தில் தடவி கொண்டு 1/2 மணிநேரம் வைத்து அதன் பிறகு குளியுங்கள்.
இதனை தொடர்ந்து செய்துவருவதின் மூலம் பனிக்காலத்தில் ஏற்பாடும் அனைத்து சரும பிரச்சனைகளும் நீங்கி உங்களின் சருமம் நன்கு பொலிவு பெரும்.
குறிப்பு: பொதுவாக பனி அல்லது மழைக்காலங்களில் தொடர்ந்து உங்களின் சருமத்தில் தூய்மையான தேங்காய் எண்ணெயை தடவி வருவதும் உங்களின் சரும பிரச்சனைகளை போக்க உதவும்.